வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் காரான எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கான முன்பதிவை தொடங்க உள்ளது. பகல் 12.00 மணிக்கு எம்ஜி மோட்டாரின் 120 டீலர்கள் மற்றும் அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு நடைபெற உள்ளது.
50க்கு மேற்பட்ட நகரங்களில் 120 டீலர்களை தொடங்கியுள்ள எம்ஜி மோட்டார் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை அண்ணா சாலை, சென்னை ஓஎம்ஆர், மதுரை, கோவை போன்ற இடங்களில் முதற்கட்டமாக விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களை தொடங்கியுள்ளது.
ஹெக்டர் எஸ்யூவி சிறப்புகள்
143hp குதிரைத்திறன் மற்றும் 250Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜினில் மட்டும் 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்க உள்ளது. மைல்ட் ஹைபிரிட் வசதி மூலம் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.
எம்ஜி ஹெக்டர் பெட்ரோல் காரினு மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ ஆகும்.
ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்திருக்கும்.
எம்ஜியின் ஹெக்டர் எஸ்யூவியின் டீசல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.