Car News ஹெக்டர் பிளஸ் காருக்கு முன்பதிவை துவங்கிய எம்ஜி மோட்டார் Last updated: 6,July 2020 2:58 pm IST MR.Durai Share mg hector plus bookings openசீனாவின் எஸ்ஏஐசி குழுமத்தின் அங்கமான எம்ஜி மோட்டார் ஹெக்டர் வெற்றியை தொடர்ந்து 6 இருக்கை பெற்ற ஆடம்பர வசதிகள் பெற்ற எஸ்யூவி காராக ஹெக்டர் பிளஸ் வெளியிடப்பட உள்ளது. சூப்பர்,ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மூன்று வகையான வேரியண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெறுகின்றது. ரூ.50,000 முன்பதிவு கட்டணமாக செலுத்தி ஆன்லைன் வாயிலாக பதிவு செய்துக் கொள்ளலாம்.ஹெக்டர் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ள இந்த மாடலில் 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. அடுத்து 1.5 லிட்டர் என்ஜினுடன் வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெறுகின்றது.2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.5 இருக்கை கொண்ட ஹெக்டர் மாடலின் தோற்ற அமைப்பின் பின்புலத்தை பெற்றருந்தாலும் வித்தியாசத்தை வழங்கும் வகையில், முன்புற கிரில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு முன்புற பம்பர், எல்இடி ஹெட்லைட் உடன் ரன்னிங் விளக்கில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுள்ளது. பின்புற பம்பர் டெயில் கேட் மற்றும் எல்இடி விளக்குகளில் சிறிய மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது.இன்டிரியரை பொறுத்தவரை சிறிய அளவிலான ஸ்டைலிங் ட்விக்ஸ், 6 இருக்கைகளை பெற்ற ஹெக்டர் பிளசில் (2+2+2) என முறையே இருக்கைகளை பெற்றதாக அமைந்துள்ளது. 10.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், எம்ஜி இண்டர்நெட் இன்சைடு கனெக்ட்டிவிட்டி வசதி மூலமாக 55 விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற உள்ளது.பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, டாப் ஷார்ப் வேரியண்டில் ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட், ஈஎஸ்சி, டிராக்ஷன் கட்டுப்பாடு, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி பார்க்கிங் கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.ஹெக்டர் பிளஸ் காரில் ஸ்டாரி ஸ்கை நீலம், கிளேஸ் சிவப்பு, பர்கண்டி சிவப்பு, ஸ்டாரி கருப்பு, கேண்டி வெள்ளை மற்றும் அரோரா சில்வர் என ஆறு வண்ண விருப்பங்களில் வழங்கப்பட உள்ளது. ஹெக்டர் பிளஸ் காரை எதிர்கொள்ள உள்ள மாடல்களில் மிக முக்கியமாக இன்னோவா கிரிஸ்ட்டா, டாடா கிராவிட்டாஸ், XUV500 மற்றும் வரவுள்ள 7 இருக்கை பெற உள்ள கிரெட்டா போன்ற மாடல்கள் அமையும். TAGGED:MG Hector Plus Share This Article Facebook Previous Article ஹூண்டாய் iMT என்றால் என்ன ? வென்யூ காரில் அறிமுகம் Next Article ரூ.4.16 லட்சத்தில் ரெனால்ட் க்விட் RXL விற்பனைக்கு வெளியானது