Car News 7 சீட்டர் எம்ஜி ஹெக்டர் பிளஸ் அறிமுக விபரம் Last updated: 19,December 2020 12:02 pm IST MR.Durai Share mg hector plus bookings openசீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் காரின் அடிப்படையிலான 6 இருக்கைகள் கொண்ட மாடலாக முன்பு விற்பனையில் இருக்கின்றது. இந்நிலையில் அடுத்ததாக 7 இருக்கைகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு வெளியாக இருக்கின்றது.இந்திய சந்தையில் தற்போது கிடைக்கின்ற 6 இருக்கைகள் கொண்ட மாடலாக ரூபாய் 13.74 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்றது. அடுத்ததாக வரவுள்ள 7 சீட்டர் காரின் விலை சற்றுக் கூடுதலான தொடங்கலாம்.7 இருக்கைகள் என்பது தற்போது 6 இருக்கைகள் வழங்கப்பட்ட மாடலில் மதியில் வழங்கப்பட்டுள்ள இரண்டு கேப்டன் இருக்கைகளுக்கு பதிலாக பெஞ்ச் இருக்கையாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, நடுப்பகுதியில் அமைந்துள்ள அந்த இருக்கையில் மூன்று நபர்கள் அமரலாம்.மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், தற்போது ஹெக்டர் பிளஸ் காரில் இடம் பெற்றிருக்கின்ற அதே எஞ்சின்தான் இந்த மாடலுக்கு வழங்கப்படவுள்ளது. 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. அடுத்து 1.5 லிட்டர் என்ஜினுடன் வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெறுகின்றது.புதிய 7 சீட்டர் ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு ஜனவரி மாத இறுதியில் வெளியாகலாம். இதுதவிர இந்நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடலையும் வெளியிடலாம்.மேலும் 2021 ஜனவரி 1 முதல் அனைத்து கார்களின் விலையை 3 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது. TAGGED:MG Hector Plus Share This Article Facebook Previous Article ஜனவரி முதல் ரெனால்ட் கார்கள் விலை ரூ.28,000 வரை உயருகின்றது Next Article ஜனவரி 1 முதல் எம்ஜி மோட்டார் கார்களின் விலை உயருகின்றது