இந்தியாவில் எம்ஜி மோட்டார் (மோரீஸ் காரேஜஸ்) வெளியிட உள்ள முதல் ஹெக்டர் எஸ்யூவி மாடலை தொடர்ந்து எம்ஜி eZS எஸ்யூவியின் மின்சார பவர்ட்ரெயின் கொண்டதாக விற்பனைக்கு டிசம்பர் 2019 மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் முதன்முறையாக அறிமுகமான எம்ஜி eZS எஸ்யூவி 150 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச சிங்கிள் சார்ஜ் பயண தொலைவு 250 கிமீ வரை வழங்கும்.
எம்ஜி eZS எஸ்யூவி சிறப்புகள்
சர்வதேச அளவில் இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு செல்ல உள்ள அதே காலகட்டத்தில் இந்தியாவில் விற்பனைக்கு முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்ய அல்லது பாகங்களை தருவித்து உற்பத்தி செய்ய என இரு விதமான திட்டங்களை எம்ஜி ஆராய்ந்து வருகின்றது.
மிகவும் ஸ்டைலிஷான் மற்றும் இளைய தலைமுறையினர் விரும்பும் ZS பெட்ரோல் வெர்ஷனை அடிப்படையாக கொண்ட எம்ஜி எலெக்ட்ரிக் ZS மாடலில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 335 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும்.
வரும் மே மாதம் 50 டீலர்களை திறக்க எம்ஜி திட்டமிட்டுள்ள நிலையில், ஹெக்டர் எஸ்யூவி மே மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது எலெக்ட்ரிக் மாடலாக எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவி டிசம்பர் 2019-ல் விற்பனைக்கு வெளியிட உள்ளது.