மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய சர்வதேச அளவில் முதலீடு செய்ய உள்ளது. இந்த எலக்ட்ரிக் கார்களை தனது புதிய துணை பிரண்டான EQ மூலம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் கார்களுக்கான பணிகளை முடித்து விட்டதாகவும், மெர்சிடிஸ் பென்ஸ் EQC முழுவதும் எலக்ட்ரிக் எஸ்யூவிகளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து மெர்சிடிஸ் பென்ஸ் EQC என்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் விற்பனை இலக்கை அடையவும், மார்க்கெட்டிங் வருவாயை பெருக்கவும் முடிவு செய்துள்ளது.
உதாரணமாக, வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் எளிதாக கிடைக்க செய்தல், கார் உரிமையாளர் உள்ள இடத்திலேயே சார்ஜிங் மையங்கள் அமைத்தல், பொதுவான சார்கிங் மையங்களை EQC வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதுடன், சர்விஸ் சென்டர்கள் மற்றும் ஷோரூம்களை உருவாக்குதல் போன்றவை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் முழுமையான எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மொத்தத்தில் விரைவில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்பது உறுதியாகியுள்ளது.