மிகவும் ஆடம்பரமான வசதிகளை பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் EQE 500 எலக்ட்ரிக் எஸ்யூவி சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 550 கிமீ ரேஞ்சு வழங்கும் என WLTP மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரிக்கு 10 ஆண்டுகள் சிறந்த வாரண்டியைப் பெறுகிறது, மேலும் 5 ஆண்டுகள் கழித்து, மறுவிற்பனை மதிப்பு GLE எஸ்யூவி போலவே இருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. வாகனம் 2 வருட சர்வீஸ் இடைவெளியைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்டார் ES பேக்கேஜ் (4 ஆண்டுகள்/வரம்பற்ற கிமீ) ரூ.. 90,000 ஆகவும், அட்வான்ஸ் அஷ்யூரன்ஸ் நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக் ரூ. 77,000 ஆக உள்ளது.
Mercedes-Benz EQE
300 kW (402 HP) பவர் மற்றும் 858 Nm டார்க் வழங்குகின்ற 90.56 kWh பேட்டரி கொண்டதாக அமைந்துள்ளது. WLTP ரேஞ்சு ஆனது 550 கிமீ ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 210Kmph ஆகவும், 0-100kmph வேகத்தை எட்ட முதல் 4.9 வினாடிகள் போத்மானதாகும்.
சார்ஜிங் செய்ய 11kW AC, DC விரைவு சார்ஜிங் முறையில் 60 kW மற்றும் 120 kW, 170KW வரை ஆதரிக்கின்றது.
பென்ஸ் EQE காரில் 56 அங்குல ஹைப்பர்ஸ்கிரீன் கொண்ட MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பர்மெஸ்டர் 15-ஸ்பீக்கர் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் லைட்ஸ், ஹெபா ஃபில்டர், ஏர் பேலன்ஸ் பேக்கேஜ், HUD, AIRMATIC சஸ்பென்ஷன், ADAS லெவல்-2, முன்புறத்தில் மசாஜ் இருக்கைகள் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
EQE 500 என்பது இந்தியாவில் EQB எஸ்யூவி மற்றும் EQS செடானுக்குப் பிறகு மூன்றாவது மெர்சிடிஸ்-பென்ஸ் EV ஆகும்.