இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து ஆஃப் ரோடு சாகங்களுக்கும் ஆடம்ப வசதிகளுக்கும் குறைவில்லாத எலெக்ட்ரிக் ஜி-கிளாஸ் எஸ்யூவி ரூபாய் 3 கோடி (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் கிடைக்க உள்ள ஒற்றை வேரியண்ட் EQG 580 அனைத்து வசதிகளும் பெற்ற டாப் ஒன் வேரியண்ட் ஆகும், இதில் 116Kwh பேட்டரி பொருத்தப்பட்டு 4 மோட்டார்களுடன் அதிகபட்சமாக 587hp பவர் , 1,164Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 0-100kph வேகத்தை எட்ட 4.7 விணாடிகள் எடுத்துக் கொள்ளும் மற்றும் டாப் ஸ்பீடு 180Km/hr ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 473 கிமீ பயணிக்கலாம் என WLTP மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
200kW DC வேகமான சார்ஜர் மூலம் 32 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
ஜி-டர்ன், ஜி-ஸ்டீயரிங், ஆஃப்-ரோடு சாகசங்கள் என அனைத்துக்கும் ஏற்ற இந்த மாடலுக்கு முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், 2025 மூன்றாவது காலாண்டு வரையில் நிறைவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.