இந்தியாவின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ப்ர்ஃபாமென்ஸ் ரக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிரிவின் கீழ் இரண்டு லிமிடெட் எடிசன் மாடல்கள் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLE 43 ஆரஞ்சு ஆர்ட், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SLC 43 ரெட் ஆர்ட் ஆகியவை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி லிமிடெட் எடிசன்
இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி வெளியிட்டுள்ள GLE 43 ஆரஞ்சு ஆர்ட், SLC 43 ரெட் ஆர்ட் ஆகிய வரையறுக்கப்பட்ட மாடல்கள் தலா 25 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.
இரண்டு பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி மாடல்களும் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்ட விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், 367 பிஹச்பி ஆற்றல் மற்றும் 520 எஃஎம் இழுவைத் திறன் வழங்கும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLE 43 ஆரஞ்சு ஆர்ட் மாடலில் குறைந்த செக்ஷனை பெற்ற முன் மற்றும் பின் பம்பருடன், 21 அங்குல கருப்பு பீச்சினை பெற்ற அலாய் வீல் கொண்டு கருப்பு நிற வளையத்தை பெற்ற எல்இடி ரிங் மற்றும் எல்இடி ஹெட்லைட் கொண்டதாக வந்துள்ளது. இன்டிரியரில் ஆரஞ்சு நிறத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SLC 43 ரெட் ஆர்ட் எடிசனில் 18 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டு முன் மற்றும் பின் பம்பர்களில் சிவப்பு நிற பூச்சை பெற்றிருப்பதுடன் பிரேக் காலிப்பர் , இன்டிரியர் ஏஎம்ஜி பேட்ஜ் உள்ளிட்ட இடங்களில் சிவப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
Mercedes-AMG GLE 43 SUV coupé (OrangeArt) – ரூ. 1.02 கோடி
Mercedes-AMG SLC 43 convertible (RedArt) – ரூ. 87.4 லட்சம்