இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள பெர்ஃபாமென்ஸ் ரக மெர்சிடிஸ் ஏஎம்ஜி GLC 43 4மேட்டிக் கூபே ரக மாடல் விலை ரூபாய் 76.70 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகின்ற முதல் ஏஎம்ஜி ரக மாடலாக விளங்குகின்ற ஜிஎல்சி 43 கூபே காரில் 3.0 லிட்டர் V6 பை டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 385 bhp பவர் மற்றும் 520 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டு 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தைப் பெற்றுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.6 விநாடிகளும், அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஏஎம்ஜி பிராண்டிற்கு உரித்தான முன்புற கிரில் கொடுக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர்டேம் கொண்டதாகவும், பக்கவாட்டில் 19 அங்குல அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 19 முதல் 21 அங்குல அலாய் வீல்கள் ஆப்ஷனாக உள்ளது. இரட்டை பிரிவு பெற்ற புகைப்போக்கி மற்றும் எல்இடி டெயில் லைட் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்டிரியரில் மிக ஆடம்பரமான பல்வேறு வசதிகளுடன் MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகின்றது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏழு ஏர்பேக்குகள், ஆக்டிவ் பிரேக்கிங் அசிஸ்ட், ஆக்டிவ் பொன்னெட், மெர்சிடிஸ் me connect 24×7 அவசர சேவைகள் மற்றும் ப்ரீ-சேஃப் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
Web title : Mercedes AMG GLC 43 4MATIC Coupe launched