உலகில் மிக நீண்டகால உற்பத்தி செய்யப்படும் கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 எஸ்யூவி விளங்குகின்றது. தற்போது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன்
சர்வதேச அளவில் முதன்மையான ஆடம்பர சொகுசு கார் நிறுவனமாக விளங்கும் ஜெர்மனி நாட்டின் முன்னணி மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி பிராண்டின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஜி வரிசை எஸ்யூவி மாடலின் உற்பத்தி 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.
அதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜி55 ஏஎம்ஜி என்ற பெயருடன் V8 எஞ்சின் பெற்ற மாடலாகவும், கடந்த 2012 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ஜி கிளாஸ் எஸ்யூவி மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 V12 எஞ்சின் பெற்றதாக வெளியிடப்பட்டது. உலகில் விற்பனை செய்யப்பட்ட மிகுந்த சக்திவாய்ந்த எஸ்யூவிகளில் 33 சதவீத பங்களிப்பை ஜி கிளாஸ் மாடல்கள் பெற்றுள்ளது. மெர்சிடிஸ் வரலாற்றில் நீண்டகாலம் உற்பத்தி செய்யப்படும் மாடலாக விளங்குகின்றது.
இறுதி பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள ஜி65 ஃபைனல் எடிசன் மாடலில் சர்வதேச அளவில் 65 அலகுகள் மட்டுமே ஆஸ்திரியா நாட்டில் உள்ள க்ராஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
எஞ்சினில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல், அதிகபட்சமாக 630 hp குதிரைதிறன் ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், 1000Nm டார்க்கினை வழங்கும் வி 12 சிலிண்டர் பெற்ற 6.0 லிட்டர் எஞ்சினை பெற்றுள்ளது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 7 வேக பிளஸ்-டிரானிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள இந்த எஸ்யூவி காரில் வெங்கல நிறத்தை பெற்ற அசென்ட்ஸ், 21 அங்குல அலாய் வீல், ஃபைனல் எடிசன் பேட்ஜ் ஆகியவற்றை பெற்றுள்ளது.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 எடிசன் விலை ரூ.2.38 கோடி (€310,233)