மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் ரக செடான் மாடலான ஏஎம்ஜி C 43 காரின் விலை ரூ.98 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏஎம்ஜி பெர்ஃபாமென்ஸ் ரக வரிசையில் இணைந்துள்ள சி43 செடான் காரில் ஹைபிரிட் உடன் கூடிய 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
Mercedes-AMG C 43
மின்சார டர்போசார்ஜர் கொண்ட புதிய 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 408hp பவர் மற்றும் 500Nm டார்க் உற்பத்தி செய்கிறது. மேலும், இதில் 14hp பவர் வெளிப்படுத்தும் 48V மைல்ட் ஹைப்ரிட் அமைப்பினை கொண்டுள்ளது. 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ‘ரேஸ் ஸ்டார்ட்’ செயல்பாட்டுடன், AMG 4MATIC டிரைவ் சிஸ்டம் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் பவர் அனுப்புகிறது. 0-100kph வேகத்தை எட்டுவதற்கு 4.6 வினாடிகள் போதுமானதாகும்.
சி43 மாடலில் இருந்து முற்றிலும் மேம்பட்ட பெர்ஃபாமென்ஸ் ரக மாடலுக்கு ஏற்ற வகையில் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை பெற்ற சி43 ஏஎம்ஜி காரில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட், பளபளப்பான-கருப்பு கண்ணாடி உறைகள் கொண்ட பெரிய ஏர்டேம் வென்டுகள் உள்ளன.
12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டத்தில் AMG மாடலுக்கு ஏற்ற டிஜிட்டல் கிராபிக்ஸ் மற்றும் AMG தீம் கொண்ட தோல் மூடப்பட்ட பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்ஸ் இருக்கை, பெடல்கள் மற்றும் சிவப்பு சீட் பெல்ட் மற்றும் 710W, 15-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.