பிரிட்டிஷ் நாட்டின் பிரசத்தி பெற்ற மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர் 2018 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அதிகார்வப்பூர்வமாக மெக்லாரன் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மெக்லாரன்
இந்தியாவில் உயர் ரக ஸ்போர்ட்டிவ் கார் தயாரிப்பாளர்களான லம்போர்கினி, போர்ஷே, ஃபெராரி, மஸாராட்டி உட்பட பல்வேறு சூப்பர் கார் நிறுவனங்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில் புதிய வரவாக அடுத்த ஆண்டில் மெக்லாரன் நுழைய உள்ளதாக ஆட்டோ கார் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் இந்திய சந்தையிலும் மெக்லாரன் நிறுவனத்தின் 540C, 570 கூபே,ஸ்பைடர் மற்றும் GT, 650S ஸ்பைடர் மற்றும் கூபே, 675LT மற்றும் 720S ஆகிய சூப்பர் ஸ்போர்ட்டிவ் கார் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.
2015 ஆம் ஆண்டில் 1654 கார்களை விற்பனை செய்திருந்த இந்நிறுவனம் கடந்த 2016 ஆம் வருடத்தில் 3286 கார்கள் என இரு மடங்காக விற்பனை உயர்ந்திருக்கின்றது. மேலும் இந்நிறுவனம் 2022 முதல் 5 ஆயிரம் கார்களை விற்பனை செய்ய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியாவில் 2.5 கோடி ஆரம்ப விலையில் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனம் சூப்பர் கார் சந்தையில் முன்னணி வகிக்கின்றது.