உலகின் மிகவும் ஸ்டைலிஷான் மற்றும் பவர்ஃபுல் சூப்பர் கார்களை தயாரிக்கும் மெக்லாரன் நிறுவனத்தின், மெக்லாரன் 720S ஸ்பைடர் மாடலின் ஒரு ஸ்பெஷல் காரினை பெயின்டிங் செய்ய 260 மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளது.
மிகவும் அழகான நிறத்தை பெற்றுள்ள இந்த காரில் Cerulean Blue, Burton Blue மற்றும் Abyss என மொத்தமாக மூன்று விதமான நிறத்தை அடிப்படையாக கொண்ட அடர்ந்த நீல நிறத்தை பெற்றுள்ளது.
மெக்லாரன் 720S ஸ்பைடர்
மெக்லாரன் நிறுவனத்தின் ஸ்பெஷல் ஆப்ரேஷன்ஸ் பிரிவினால் வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் வடிவமைக்கப்பட்ட மாடலாக விளங்குகின்ற இந்த ஸ்பெஷல் காருக்கு என பிரத்தியேகமான தலைசிறந்த பெயின்டர்களின் துனையுடன் சுமார் 260 மணி நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.
மெக்லாரன் 720எஸ் ஸ்பைடர் காரின் கலரை Coriolis என இந்நிறுவனம் அழைக்கின்றது. இந்த நிறமானது Metroite Grey பாடி மேல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
710 பிஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 770 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் ட்வீன் டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 200 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 7.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும் திறன் கொண்டதாகும். மெக்லாரன் 720 எஸ் ஸ்பைடர் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 341 கிமீ ஆகும்.