வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் சாலை சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியான பிரெஸ்ஸா தொடர்ந்து காம்பாக்ட் எஸ்யூவி ரக சந்தையில் முதன்மையான மாடலாக வலம் வந்த நிலையில், தற்பொழுது வந்துள்ள வென்யூ உட்பட எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட மாடல்களுடன் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றது. மேம்படுத்தப்பட்ட மாடலாக வரவுள்ள 2020 விட்டாரா பிரெஸ்ஸாவில் தோற்ற அமைப்பில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கும். இன்டிரியரில் கூடுதலான வசதிகளை வழங்க வல்ல 8.0 அங்குல ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட சில கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற வாய்ப்புகள் உள்ளது.
முன்பே மாருதி சுசுகி அறிவித்திருந்த படி ஏப்ரல் 2020க்கு பிறகு டீசல் என்ஜினை சந்தையிலிருந்து நீக்க உள்ளதால், விட்டாரா பிரெஸ்ஸா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு வெளியாக உள்ளது. 1,462cc என்ஜின் அதிகபட்சமாக 105hp பவர் மற்றும் 138Nm டார்க் வெளிப்படுத்தும். கூடுதலாக ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் ஆனது பெற்றிருக்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.