பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் ஸ்விஃப்ட் காரில் லிமிடெட் எடிசன் ஆக்சஸரீஸ் பாகங்களை ரூ.24,990 கூடுதல் விலையில் அனைத்து வேரியண்டின் எக்ஸ்ஷோரூம் விலையிலும் இணைத்துள்ளது.
இந்தியாவில் சுமார் 23 லட்சம் ஸ்விஃப்ட் கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இணைக்கப்பட்டுள்ள லிமிடெட் எடிசனில் கூடுதல் வசதி மற்றும் கருப்பு நிறத்திற்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்விஃப்ட் காரில் பளபளப்பான கருப்பு நிற பாடி கிட், ஏரோடைனமிக் ஸ்பாய்லர், பாடி சைடு மவுன்டிங், டோர் வைசர், கருப்பு நிற கார்னிஷ் இணைக்கப்பட்ட முன்புற கிரில், பனி விளக்கு அறை மற்றும் டெயில் லேம்ப் கொண்டுள்ளது. இன்டிரியரில் புதிய இருக்கைகள் இணைக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, எந்த மாற்றங்களும் இல்லை. புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12B பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. 83 PS பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்களில் கிடைக்கின்றது.
மற்ற சாதாரண வேரியண்ட்டை விட ரூ.24,990 கூடுதலான விலையில் ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
Web title : New Maruti Suzuki swift limited edition gets more Accessories