எக்ஸ்எல் 6 காரின் மைலேஜ் லிட்டருக்கு 5 வேக மேனுவல் மாடலுக்கு 19.01 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக 17.99 கிமீ தரவல்லத்தாகும்.
ஆல்ஃபா மற்றும் ஜெட்டா என இரு வேரியண்டுகளை பெற்றுள்ள இந்த காரில் வாட் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங், 15 அங்குல அலாய் வீல் போன்றவற்றுடன் நேர்த்தியான டெயில் லைட் கொண்டதாக வந்துள்ளது.
6 கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டு மாருதியின் 7.0 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் ப்ளூடூத், USB, AUX-in , க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது. கூடுதலாக எக்ஸ்எல்6 ஆல்பா வேரியண்டில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இருக்கைகள், மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் போன்றவற்றை பெற்றிருக்கின்றது.
சாதாரண எர்டிகா காரை விட விலை உயர்த்தப்பட்டுள்ள இந்த மாடல் ரெனோ லாட்ஜி, எர்டிகா, மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ உட்பட பிரீமியம் இன்னோவா கிரிஸ்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது
Maruti Suzuki XL6 Zeta – ரூ.9,79,689
Maruti Suzuki XL6 Zeta (AT) – ரூ. 10,89,689
Maruti Suzuki XL6 ALpha – ரூ. 10,36,189
Maruti Suzuki XL6 ALpha (AT) – ரூ.11,46,189