மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற வேகன் ஆர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக விளங்கும் நிலையில் 6 ஏர்பேக்குகளை பெற்று பாதுகாப்பான காராக மாறியுள்ளது.
ஏற்கனவே மாருதியின் ஆல்டோ கே 10, செலிரியோ போன்றவை சமீபத்தில் 6 ஏர்பேக்குகளுடன் வெளியான நிலையில், இந்த வரிசையில் வேகன்ஆரும் இணைந்துள்ளது. கூடுதலாக, EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), சென்ட்ரல் லாக்கிங், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்றவை உள்ளது.
1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67hp பவர் மற்றும் 89Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஏஎம்டி உள்ளது.
கூடுதலாக சிஎன்ஜி மாடல் 56.7hp மற்றும் 82.1Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் மட்டும் உள்ள சிஎன்ஜி மைலேஜ் ஒரு கிலோவுக்கு 33.47 கிமீ வழங்குகின்றது.
1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89.7hp பவர் மற்றும் 113Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி உள்ளது.
இன்டீரியரில் 7 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கொண்டுள்ள நிலையில், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல், மேனுவல் ஏசி, எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ரியர் வியூ மிரர் (ORVM), ரிமோட் கீலெஸ் என்ட்ரி மற்றும் ரியர் வைப்பர் மற்றும் வாஷர் உள்ளன.