பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் உட்பட பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற புதிய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரூ.7.34 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11.17 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் கொண்ட விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல் மிகவும் அதீத வரவேற்பினை பெற்ற எஸ்யூவி மாடலாக விளங்கி வருகின்றது.
மாருதி சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 கார்களில் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு ஆதரவான 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் பெற உள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும்.
2020 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விலை பட்டியல்
Maruti Brezza BS6 Petrol | விலை |
---|---|
Lxi | ரூ.7,34,000 |
Vxi | ரூ.8,35,000 |
Zxi | ரூ.9,10,000 |
Zxi+ | ரூ.9,75,000 |
Vxi AT SHVS | ரூ.9,75,000 |
Zxi+ Dual Tone | ரூ.9,98,000 |
Zxi AT SHVS | ரூ.10,50,000 |
Zxi+ AT SHVS | ரூ.11,15,000 |
Zxi+ AT Dual Tone | ரூ.11,40,000 |
(எக்ஸ்-ஷோரூம் விலை )
போட்டியாளர்கள்
சமீபத்தில் வெளியான ஹூண்டாய் வென்யூ உட்பட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், வரவுள்ள கியா சோனெட் போன்ற மாடல்களை 2020 சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எதிர்கொள்ள உள்ளது.