இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், அறிமுகம் செய்த 28 மாதங்களில் 3 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.விகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளர்களில் முதலிடத்திலிருந்த மஹிந்திரா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மாருதி நிறுவனம், விட்டாரா பிரெஸ்ஸா வாயிலாக முன்னேறியுள்ளது. அறிமுகம் செய்த 28 மாதங்களாகவே தொடர்ந்து பயணிகள் கார் விற்பனையில் மாதந்தோறும் டாப் 10 கார்கள் பட்டியலில் பிரெஸ்ஸா இடம் பெற்று வருவது குறிப்பிடதக்கதாகும்.
1.3 லிட்டர் டீசல் எஞ்சினை கொண்டு இயங்குகின்ற பிரெஸ்ஸா மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் மாருதி ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டும் இடம்பெற்றுள்ளது.
இந்த எஸ்யூவி மாடலின் மொத்த விற்பனையில் 56 சதவீத பங்களிப்பினை டாப் வேரியன்ட் பெற்றிருக்கின்ற நிலையில் , புதிய வரவுகளுக்கு இடையிலும் பிரெஸ்ஸா மிகவும் விருப்பமுள்ள எஸ்யூவி மாடலாக விளங்குவதாக மாருதி விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் தலைவர் R.S கல்சி குறிப்பிட்டுள்ளார்.