மாருதி-டொயோட்டா கூட்டணியில் மாருதி சுசுகி டொயோட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நொய்டாவில் வாகனங்களை பிரித்தெடுப்பது மற்றும் மறு சுழற்சி செய்வதற்கான நிறுவனத்தை உருவாக்கி உள்ளது. முன்பாக மஹிந்திரா நிறுவனமும் இது போன்ற ஆலையை தொடங்கியது.
முதற்கட்டமாக மாதம் 2,000 வாகனங்களை பிரித்தெடுப்பது மற்றும் மறு சழற்சி செய்வதற்கான ஆரம்ப கட்ட திட்டங்களில் இரு நிறுவனங்களும் 50:50 என முதலீடு செய்து கூட்டு நிறுவனமாக செயல்பட உள்ளது. முதல் ஆலையை நெய்டாவில் அமைக்க உள்ளது. இந்நிறுவனம் ஆயுள் நிறைவடைந்த வாகனங்களை (End-of-Life Vehicles – ELVs) கொள்முதல் செய்து அகற்ற உள்ளது. மேலும், இந்த செயல்முறையில் இந்திய சட்டங்கள் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரம் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளின் படி முழுமையாக திடக் கழிவு மற்றும் திரவ கழிவு மேலாண்மையும் அடங்கும்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெனிச்சி அயுகாவா இது பற்றி கூறுகையில் “மாருதி சுசுகி நிறுவனம் ஆயுள் முடிவடைந்த வாகனங்களை மறுசுழற்சி செய்வதை ஆதரிக்கின்றது. இந்த கூட்டு முயற்சி, எம்.எஸ்.டி.ஐ (Maruti Suzuki Toyotsu India Private Limited) மூலம், மறுசுழற்சி மற்றும் ஆதரவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் சுற்றுச்சூழல் நட்பு அமைப்புகள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்தும் போது வள மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பு. பழைய வாகனங்களை விஞ்ஞான மற்றும் நட்பு முறையில் அகற்றுவது சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
1970 முதல் டொயோட்டா டூஸ்ஷோ நிறுவனம் ஜப்பானில் வாகனங்களை மறு சுழற்சி செய்து வருகின்றது. இந்த மையத்திற்கு வாகனங்கள் மாருதி டீலர்கள், பிற நிறுவன டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த ஆலை 2020-2021 ஆம் ஆண்டின் நிதி ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
எவ்வாறு வாகனங்கள் மறு சழற்சி செய்யப்படும் விளக்கும் படம்.