ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் வகையில் ஃபிரான்க்ஸ் உட்பட பல்வேறு கார்களை மாருதி சுசூகி தயாரிக்க லிட்டருக்கு 35-40 கிமீ மைலேஜ் தரும் வகையில் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
மாருதி ஃபிரான்க்ஸ் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை பலேனோ, சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் புதிய எம்பிவி ரக மாடலையும் மிக சிறப்பான சுசூகியின் அதிநவீன ஹைபிரிட் சிஸ்டத்தை பட்ஜெட் விலையில் SUZUKI HEV என்ற குறியீடு பெயரில் டொயோட்டா நிறுவனத்தின் நுட்பத்தை பயன்படுத்தாமல் தனியாக தயாரிக்க உள்ளது.
Maruti Suzuki Hybrid
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது எதிர்கால மாடல்களை ஹைபிரிட், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜின் உட்பட சுற்றுச்சூழல் பாதிப்புகளை பெருமளவில் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது.
மாருதி சுசூகியின் புதிய சீரிஸ் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் (குறியீடு: HEV) சீரிஸ் பேரலல் மற்றும் பேரலல் மட்டும் உள்ள ஹைபிரிட் நுட்பத்தை கணிசமாக மலிவானதாக இருக்கும், இது பவர்டிரெய்னின் உள்ளார்ந்த அதிக விலையை எதிர்கொள்ள கார் தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக உள்ளது.
ஹைபிரிட் கார்களுக்கு எந்த வரிச் சலுகையும் வழங்க அரசாங்கம் இதுவரை மறுத்துள்ளது மற்றும் EV மாடல்களுக்கு வெறும் 5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீத ஜிஎஸ்டி வரி உள்ளது. எனவே, விலை பாதிப்பைக் குறைக்க, மாருதி சுஸுகி சீரிஸ் ஹைபிரிட் என்ஜின் மூலம் தீர்வைக் கண்டறிந்துள்ளது.
டொயோட்டாவின் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை விட விலை குறைவான நுட்பத்தை மாருதி சுசூகி தயாரிக்க உள்ளதால், அதிகப்படியான மைலேஜ் வழங்கும் வகையிலும் உருவாக்க உள்ளது.
ஆட்டோகார் இந்திய வெளியிட்டுள்ள தகவலின் படி, மாருதி சுஸுகியின் HEV வரிசையில், 2025 ஆம் ஆண்டு முதல் மாடலாக ஹைப்ரிட் ஃபேஸ்லிஃப்ட் ஃபிரான்க்ஸ் (குறியீடு: YTB) மற்றும் அடுத்த தலைமுறை பலேனோ (குறியீடு: YTA) 2026ல் அறிமுகமாகும்.
அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் (குறியீடு: YEA) 2027க்கு முன்பாக ஹைபிரிட் ஆப்ஷனில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. HEV அமைப்பின் வரிசையில் உள்ள மற்ற மாடல்கள் ஸ்பேசியா-அடிப்படையிலான காம்பேக்ட் MPV (குறியீடு: YDB) மற்றும் அடுத்த ஜென் பிரெஸ்ஸா மாடலும் வரவுள்ளது.