இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு பெரிய பிரச்சினையாக உருவாகி வருகிறது. இந்தியாவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் இந்த் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை வரும் 2020 ஆண்டில் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனம் பேட்டரி மூலம் இயங்கும் கார்களை தயாரித்து உள்ளது இந்த கார்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு, நிறுவனத்தின் குருகிராம் தொழிற்சாலையில் சில மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது. இந்த கார்களுக்கான சோதனை நடத்தப்பட்டு முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை எலக்ட்ரிக் வாகனங்களின் செயல்பாடு உலகில் உள்ளதை போன்று இந்தியாவிலும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த கார்களுக்கான லித்தியம் பேட்டரிகளுக்காக டொஷிபா மற்றும் டென்சோ நிறுவனத்துடன் மாருதி நிறுவனம் இணைந்துள்ளது. இது மட்டுமின்றி டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து ஹைபிரிட் தொழில்நுட்பங்களையும் வாகனங்களையும் மேம்படுத்தி வருகிறது.