மாருதி சுசூகி ஸ்விஃப்ட், இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி கார்களின் வரிசையில் ஆல்டோ, டிசையர் கார்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த காரை மாதம் ஒன்றுக்கு 19,000 யூனிட்களை விற்பனை செய்ய மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஷோரூம்களுக்கு வந்துள்ள இந்த புதிய லிமிடெட் எடிசன் கார்கள், தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்விஃப்ட் கார்கள், ஹூண்டாய் கிராண்ட் i10, ஃபோர்டு ஃபிகோ, டொயோட்டா எட்டியோஸ், மஹிந்திரா KUV 100 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.