2 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எட்டியதை தொடர்ந்து ஸ்டைலான அதிகாரத்தை குறிக்கும் வகையில் Dominion Edition விற்பனைக்கு Alpha, Zeta மற்றும் Delta என மூன்று வேரியண்டுகளில் அக்டோபர் 2024 பண்டிகை காலத்தில் மட்டும் கிடைக்க உள்ளது.
குறிப்பாக வழக்கமான கிராண்ட் விட்டாரா மாடலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஆக்செரீஸ் மூலம் இந்த சிறப்பு டாமினியன் எடிசன் வித்தியாசப்படக்கின்றது. குறிப்பாக இந்த பதிப்பில் முன்புற பம்பர், ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட இடங்களில் க்ரோம் பூச்சூ, கார் கவர், ஹெட்லேம்பில் கருப்பு நிற கார்னிஷ் ECSTAR கார் கேர் கிட், இன்டீரியரில் ஸ்டைலிங் மேம்பாடு, 3டி ஃபுளோர் மேட், சீட் கவர் என மொத்தமாக 20 விதமான ஆக்செரீஸ் கொண்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும், Dominion Edition கிட் பெற கூடுதலாக Alpha வேரியண்டில் ரூ.52,699, Zeta வேரியண்டில் ரூ.49,999 மற்றும் Delta வேரியண்டில் ரூ.48,599 ஆக விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
1.5-லிட்டர், 4 சிலிண்டர் K15C பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 102 hp மற்றும் 137 டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து ஹைப்ரிட் என்ஜின் 78 bhp பவர் 141 Nm டார்க் வழங்கும் மின்சார மோட்டாருடன் 91 bhp மற்றும் 122 Nm டார்க் கொண்o 1.5-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என இரண்டும் இணைந்து செயல்பட்டு அதிகபட்சமாக 115.56 hp பவரை வழங்குகின்றது. இந்த மாடலில் இ-சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.