ஆஃப் ரோடு லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலான மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காருக்கு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்குகின்றது. தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.1 லட்சம் வரை சலுகை வழங்கப்பட்ட நிலையில் ஜிம்னி தண்டர் எடிசன் என்ற பெயரில் தற்பொழுது ரூ.2 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சலுகை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் டிசம்பர் 31,2023 வரை மட்டுமே கிடைக்க உள்ளது.
Maruti Suzuki Jimny Thunder Edition
குறிப்பாக ஜிம்னி ஜெட்டா வேரியண்டிற்கு மட்டுமே ரூ.2,00,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது. மற்ற வேரியண்டுகளுக்கு ரூ.1,00,000 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.
ஜிம்னி எஸ்யூவி காரில் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
தண்டர் எடிசனில் ஒரு சில ஆக்சஸெரீஸ்கள்இணைக்கப்பட்டுள்ளது. அவை பாடி ஸ்டிக்கரிங், ஸ்கிட் பிளேட், கதவு வைசர் மற்றும் கார்னிஷ் சேர்க்கப்பட்ட ORVM, ஹூட் மற்றும் ஃபெண்டர்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Jimny Thunder Edition Price list:
Variant | Ex-showroom price |
Zeta MT | ₹ 10.74 லட்சம் |
Zeta AT | ₹ 11.94 லட்சம் |
Alpha MT | ₹ 12.69 லட்சம் |
Alpha MT dual-tone | ₹ 12.85 லட்சம் |
Alpha AT | ₹ 13.89 லட்சம் |
Alpha AT dual-tone | ₹ 14.05 லட்சம் |
(all price ex-showroom)