இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காரின் என்ஜின் வேரியண்ட் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
ஜிம்னி எஸ்யூவி கார் 5 கதவுகளை பெற்று ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் என்ஜின் கொண்டுள்ள ஜிம்னி காரில் இரண்டு விதமான வேரியண்ட் உள்ளது.
Maruti Suzuki Jimny on-Road Price
மாருதி சுசூகியின் ஜிம்னி 5 டோரின் ஆன்ரோடு விலை ரூ.12.75 லட்சம் முதல் ரூ.15.05 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேனுவல் வேரியண்ட் மைலேஜ் 16.94 Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது.
எக்ஸ்ஷோரூம் | ஆன்ரோடு | |
Jimny Zeta AllGrip Pro MT | ₹ 12,75,500 | ₹ 16,03,971 |
Jimny Alpha AllGrip Pro MT | ₹ 13,70,500 | ₹ 17,17,664 |
Jimny Alpha AllGrip Pro MT DT | ₹ 13,86,500 | ₹ 17,36,964 |
Jimny Zeta AllGrip Pro AT | ₹ 13,85,500 | ₹ 17,35,895 |
Jimny Alpha AllGrip Pro AT | ₹ 14,80,500 | ₹ 18,52,543 |
Jimny Alpha AllGrip Pro AT DT | ₹ 14,96,500 | ₹ 18,75,765 |
(on-road Price TamilNadu)
(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் விலை தோராயமானதாகும், டீலர்களுக்கு டீலர் சிறிய அளவில் மட்டும் விலை வித்தியாசம் இருக்கலாம்.)
கிரானைட் கிரே, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், நெக்ஸா ப்ளூ, ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் உடன் கருப்பு நிற ரூஃப் மற்றும் கைனெடிக் மஞ்சள் உடன் பிளாக் ரூஃப் என மொத்தமாக 7 நிறங்களில் இரண்டு டூயல் டோன் கொண்டுள்ளது.
Jimny Zeta 1.5-litre petrol MT/AT
- ஸ்டீல் சக்கரங்கள்
- மின்சாரத்தில் இயங்கும் விங் கண்ணாடிகள்
- 7.0 அங்குல தொடுதிரை வசதி
- Smartplay Pro இன்ஃபோடெயின்மென்ட்
- 4 ஸ்பீக்கர் பெற்ற ஆடியோ சிஸ்டம்
- வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
- ரியர் டிஃபோகர்
- கலர் MID டிஸ்பிளே
- பவர் விண்டோஸ்
- ரிவர்ஸ் கேமரா
- ISOFIX குழந்தை இருக்கைகள்
- ESP (எலெகட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம்)
- 6 காற்றுப்பைகள்
- சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர்கள்
- பிரேக் லிமிடெட் டிஃபெரன்ஷியல்
Jimny Alpha 1.5-litre petrol MT/AT
ஜெட்டா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாறுபட்ட வசதிகள்
- பாடி நிறத்திலான கதவு கைப்பிடிகள்
- அலாய் வீல்
- ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்
- ஹெட்லேம்ப் வாஷர்கள்
- மூடுபனி விளக்குகள்
- என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்
- க்ரூஸ் கட்டுப்பாடு
- ஏசி கட்டுப்பாடு
- ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம்
- 9.0 அங்குல தொடுதிரை
- Smartplay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
சுசூகி AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.