நாளை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலான மாருதி சுசூகி Invicto பிரீமியம் எம்பிவி காரில் ஒற்றை வேரியண்ட் மட்டும் ஹைபிரிட் பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம்.
சுசூகி-டொயோட்டா கூட்டணியில் பல்வேறு மாடல்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இந்திய சந்தையில் ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா, பலேனோ மற்றும் கிளான்ஸா உள்ளன.
மாருதி சுசூகி Invicto
தற்பொழுது வரை வெளியிட்டப்பட்ட டீசர்கள் மற்றும் Invicto தொடர்பாக வெளியான படங்களின் அடிப்படையில், இன்விக்டோ ஆனது இன்னோவா ஹைக்ராஸ் மாடலைப் போலவே தோற்றமளிக்கிறது, ஏனெனில் மாற்றங்கள் முன் மற்றும் பின்புறத்தில் மட்டுமே உள்ளன, அதுவும் மிகக் குறைவாகவே உள்ளது. Hycross காரில் உள்ள ஒற்றை நிற அலாய் வீலுக்கு பதிலாக டூயல் டோன் அலாய் வீல்களுடன், கிராண்ட் விட்டாரா காரில் உள்ளதை போன்ற குரோம் கிரில் கொண்டு இருப்பினும், நெக்ஸாவின் ட்ரை-எலிமென்ட் ஹெட்லைட் பெறுகிறது.
இன்டிரியரில், பெரிதாக மாற்றமில்லாமல் வரவுள்ளதால் பழுப்பு நிறத்திற்கு பதிலாக கருப்பு வண்ணத் திட்டத்தை பெற்றுள்ளது. மற்றபடி 7 இருக்கை கொண்டதாக வரக்கூடும்.
184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
10-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-சோன் காலநிலை கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் ஒட்டோமான் கூடிய பவர் கேப்டன் இருக்கைகள் பெற்றுள்ளது. பாதுகாப்பிற்கான அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா பெற்றிருக்கும்.
விலையை சற்று குறைப்பதற்காக ADAS எனப்படுகின்ற நவீனத்துவமான பாதுகாப்பு வசதிகளை பெறாமல் invicto அறிமுகம் செய்யப்படலாம்.
நாளை விற்பனைக்கு வரவிருக்கும் மாருதி சுசூகி Invicto காரின் விலை ரூ.25 முதல் 28 லட்சத்தில் துவங்கலாம்.