இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்நியா நிறுவனத்தின், க்ராஸ்ஓவர் ரக மாருதி சுசூகி இக்னிஸ் காரின் குறைவான விற்பனை எண்ணிக்கை காரணமாக டீசல் எஞ்சின் பெற்ற மாடலின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாருதி சுசூகி இக்னிஸ்
டீலர்கள் வாயிலாக வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் , தற்காலிகமாக மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடலின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. கடந்த 2017 யில் வெளியான இக்னிஸ் மாதந்தோறும் சராசரியாக விற்பனை எண்ணிக்கை 4000 பதிவு செய்து வருகின்றது.
போட்டியாளர்களை விட டீசல் வேரியன்ட் மாடல் ரூ. 6.32 லட்ம் முதல் 7.58 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் விலை கூடுதலாக உள்ளதால் பெரிதாக வாடிக்கையாளர்களை கவரவில்லை என்ற கருத்து நிலவுகின்றது.
பெட்ரோல் வேரியன்ட் விலை குறைவாகவும் கூடுதலாகவும் வசதிகளை பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்கள் டீசல் மாடலை விட பெட்ரோல் வேரியன்ட்டை அதிகம் தேர்ந்தெடுப்பதனால் இக்னிஸ் டீசலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.