மாருதி சுஸுகி நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களை சோதனை செய்ய உள்ளது என்றும், வரும் 2020ம் ஆண்டில் இந்த வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது புரோடோ-டைப் வோகோன்ஆர் எலக்ட்ரிக் வாகனங்களை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனத்தின் குருகிராம் தொழிற்சாலை மூத்த நிர்வாக இயக்குநர் (பொறியியல்), சி.வி.ராமன் கொடியடைத்து துவக்கி வைத்தார். ஜப்பான் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனின் தலைவரான ஒசமா சுசூகி, கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த MOVE உச்சி மாநாட்டில், தங்கள் நிறுவனம் 50 புரோட்டோ-டைப் EV வாகனங்களின் சோதனைகளை தொடங்கவிருப்பதாக உறுதிபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புரோட்டோ-டைப் வாகனங்கள் பிரத்தியோகமாக ஜப்பானில் உள்ள சுசூகி மோட்டார் நிறுவனத்தால், குருகிராம் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மேக் இன் இந்தியா ஸ்கீமிற்காகவே இந்த வாகனங்களை தயாரித்து வருவதாக மருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றை ஏற்ற வகையில் இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளதாக என்பதை கண்டறிய இந்த சோதனை உதவியாக இருக்கும். மேலும் இந்த சோதனையின் போது சேகரிக்கப்படும் தகவல்கள், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்வதற்கு முன்பு பரிசீலனை செய்யப்படும்.
இந்த வாகனங்களை சோதனை செய்யும் போது, வாடிக்கையாளர்கள் அடிப்படையிலான கருத்துகளை சேகரிக்க மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது இந்தியா வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவு வசதிக்காகவும், பொருத்தமாகவும் உள்ளது என்பதையும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த புதிய புரோட்டோ-டைப் எலக்ட்ரிக் வாகனங்கள், ஏற்கனவே ஜப்பான் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் உருவாக்கிய மாடல்களில் இருந்து மேம்படுத்தப்பட்டதாகும்.