இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உற்பத்தி நிலை மாடல் அனேகமாக நவம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் விற்பனைக்கு விலை அறிவிக்கப்படலாம். அதனை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் அர்பன் எலெக்ட்ரிக் காரை தனது மாடலாக விற்பனைக்கு இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் சர்வதேச சந்தைகளில் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டொயோட்டா, சுசூகி மற்றும் டைகட்சூ இணைந்து தயாரிக்கும் 27PL எலெக்ட்ரிக் ஸ்டேக்போர்டு ஆர்க்கிடெக்சர் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மிக நேர்த்தியாக இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வளரும் நாடுகளுக்கும் அதே நேரத்தில் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டு செல்வதற்கும் இந்த மூன்று நிறுவனங்களுக்கு ஒரு அடிப்படையான மாடலாக இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி விளங்க உள்ளது.
ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரம்
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட சில முக்கிய குறிப்புகளில் இருந்து இந்த புதிய மாடல் 4 வீல் டிரைவ் ஆப்ஷனையும் பெறுகின்றது மேலும் எவ்விதமான பவர் டார்க் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட கூடுதலாக சில முக்கிய தகவல்களாக 400 கிலோமீட்டருக்கு கூடுதல் ரேஞ்ச் மற்றும் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, சுசூகி eVX மாடலும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெறக்கூடும் என உறுதியாகியுள்ளது.
டொயோட்டா அர்பன் கான்செப்ட் 4,300 மிமீ நீளம், 1,820 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது மாருதி eVX போலவே உள்ளது – பிந்தையது அதே நீளத்தைக் கொண்டுள்ளது, ஆனால் உயரம் 20 மிமீ குறைவாக உள்ளது. அகலம். இரண்டு மாடல்களும் ஒரே 2,700 மிமீ வீல்பேஸைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி மற்றும் அறிமுக விபரம்
மாருதி சுசூகி eVX உற்பத்தி 2025 ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். மே மாதத்திற்குள் ஏற்றுமதி தொடங்கும். மின்சார எஸ்யூவியின் விற்பனைக்கு அதிகாரப்பூர்வ வெளியீடு இந்த நேரத்தில் நடக்கும் மற்றும் அடுத்த ஆண்டு ஜூன் முதல் உள்நாட்டு விற்பனை தொடங்கும்.
குஜராத்தில் உள்ள சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த மாடலானது இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதால் இந்தியா ஏற்றுமதி மையமாக விளங்கும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை இதுகுறித்து ஏற்கனவே சுசூகி உறுதிப்படுத்தியுள்ளதால் தற்பொழுது உற்பத்தியும் விரைவில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் விரைவில் உற்பத்தி நிலை மாருதி சுசூகி எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பெரும்பாலும் இந்த காருக்கு இந்தியாவிலேயே பல்வேறு உதிரிபாகங்கள் உட்பட பேட்டரி தொடர்பான மோட்டார் மற்றும் கண்ட்ரோலர்கள் என அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்பதனால் விலை மிக சவாலாக ரூபாய் 15-18 லட்சத்திற்கும் கூடுதலாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாருதியின் எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வரும்போது இந்த மாடலுக்கு போட்டியாக மஹிந்திரா XUV.e8, எம்ஜி ZS EV, ஹூண்டாய் கிரெட்டா இவி, டாடா கர்வ்.இவி ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.