FY2024-2025 நிதியாண்டின் இறுதியில் மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் பேட்டரி எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு eVX கான்செப்ட் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 550km ரேஞ்ச் வரை வழங்கலாம் என மாருதி குறிப்பிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சுசூகி மோட்டார் தொழிற்சாலையில் 30 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
Maruti Suzuki First EV
மாருதி சுஸுகியின் நிர்வாக இயக்குநர் (கார்ப்பரேட் விவகாரங்கள்) ராகுல் பார்தி, “எங்கள் முதல் EV மாடல் ஆனது எஸ்யூவி, அடுத்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது, ஹன்சல்பூரில் உள்ள SMG ஆலையில் A, B, மற்றும் C மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த தொழிற்சாலையில் EV தயாரிப்பதற்காக, ஒரு புதிய தயாரிப்பு வரிசை சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மாருதி eVX இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும், ஏற்கனவே ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் தெரிவிக்கப்பட்ட படி, ஏறக்குறைய 550 கிமீ தூரம் செல்லும் வாகனம் 60 kWh பேட்டரியைக் கொண்டிருக்கும். மற்றொன்ரு குறைந்த ரேஞ்ச் வழங்கும் வகையில் 45Kwh பேட்டரி பெற்றிருக்கலாம்.
இந்தியாவில் டொயோட்டாவின் 27PL பிளாட்ஃபாத்தில் தயாரிக்கப்பட உள்ள முதல் மாருதி சுசூகி எலக்ட்ரிக் எஸ்யூவி மாருதி மட்டுமல்லாமல், டொயோட்டா நிறுவனமும் விற்பனைக்கு அர்பன் எஸ்யூவி கான்செப்ட் அடிப்படையில் விற்பனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் இங்கே தயாரிக்கப்பட உள்ள எலக்ட்ரிக் எஸ்யூவி பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சுசூகி திட்டமிட்டுள்ளது.