இந்தியாவின் பிரபலமான எம்பிவி ரக மாடலாக விளங்கும் மாருதி எர்டிகா காரின் அடிப்படையில் கூடுதல் வசதிகள் மற்றும் அம்சங்களை பெற்ற சிறப்பு மாருதி சுசூகி எர்டிகா லிமிடெட் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளியாகியுள்ளது.
மாருதி சுசூகி எர்டிகா லிமிடெட் எடிசன்
விற்பனையில் வேரியன்ட் V அடிப்படையில் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலில் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை. 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 92 ஹெச்பி ஆற்றலையும் , 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 90 ஹெச்பி ஆற்றலல் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது.
புதிய எர்டிகா லிமிடெட் எடிசன் மாடலில் மரூன் , சில்கி கிரே மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்களுடன், க்ரோம் பூச்சூ பெற்ற பனி விளக்கு அறை மற்றும் சைட் மோல்டிங், அலாய் வீல் மற்றும் லிமிடெட் எடிசன் பேட்ஜ் ஆகியவற்றை தோற்ற அமைப்பில் கொண்டுள்ளது.
இன்டிரியரில் இரு வண்ண கலவை ஸ்ட்ரீயரிங், ஆம்பியன்ட் லைட்டிங், சிவப்பு நிறத்திலான இருக்கை உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது. சாதாரன V வரிசை மாடல்களின் விலையை விட ரூ, 13,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எர்டிகா லிமிடெட் எடிசன் பெட்ரோல் – ரூ. 7.80 லட்சம்
எர்டிகா லிமிடெட் எடிசன் டீசல் – ரூ. 9.41 லட்சம்