இந்திய சந்தையில் பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நோக்கில் மாருதி சுசூகி நிறுவனமும் தனது 2025 ஈக்கோ மாடலில் 6 ஏர்பேக்குகளை பெற்றிருப்பதுடன் கூடுதலாக 6 இருக்கை வேரியண்ட் வெளியிடப்பட்டுள்ளது.
6 ஏர்பேக்குகளை பெற்றுள்ள ஈக்கோ காரில் கூடுதலாக EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), சீட் பெல்ட் ரிமைன்டருடன் பஸெர், சென்ட்ரல் லாக்கிங், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்றவை உள்ளது.
1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 81.1hp பவர் மற்றும் 105Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி உள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 19.71 கிமீ ஆகும். கூடுதலாக சிஎன்ஜி மாடலில் 70.6hp பவர் மற்றும் 95Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் மைலேஜ் ஒரு கிலோவுக்கு 26.78 கிமீ ஆகும்.
மற்றபடி, எந்த வசதிகளிலும் மாற்றமும் இல்லை, முன்பாக வழங்கப்பட்டு வந்த 7 இருக்கை வேரியண்ட் நீக்கப்பட்டு தற்பொழுது 6 இருக்கை மாடல் வெளியாகியுள்ளது. ஆனால் விலை பட்டியல் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.