இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் eVX முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலுக்கு இவிட்டாரா என பெயரிடப்பட்டு 49kwh அல்லது 61kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் ஆனது வழங்கப்படுகின்றது சர்வதேச அளவில் ஐரோப்ப சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுசூகியின் Heartect-e பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலில் FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டார் உள்ளது.
BYD நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட Blade செல் Lithium iron phosphate batteries (LFP) 49 மற்றும் 61 kWh பேட்டரி பேக்கின் அதிகாரப்பூர்வ ரேஞ்ச் விபரங்கள் தற்பொழுது எதுவும் வெளியிடப்படவில்லை.
சுசூகி இவிட்டாராவின் நீளம் 4,275 மிமீ, அகலம் 1,800 மிமீ மற்றும் உயரம் 1,635 மிமீ கொண்டுள்ள நிலையில் 2,700 மிமீ வீல்பேஸ் பெற்று ஆல் வீல் டிரைவ் வேரியண்டில் 225/50 R19 டயரும், FWD வேரியண்டில் 225/55 R18 பெற்றுள்ள நிலையில் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் வீல் பெற்றுள்ளது.
இன்டீரியரை பொறுத்தவரை ட்வின் ஸ்போக் பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு பிரஷ்டு செய்யப்பட்ட சில்வர் சுற்றுகளுடன் கூடிய செவ்வக வடிவிலான ஏசி வென்ட்கள், ரோட்டரி டிரைவ் ஸ்டேட் செலக்டர் மற்றும் பார்ட் ஃபேப்ரிக், பார்ட் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் ஃபிசிக்கல் ஏசி கன்ட்ரோல் கொண்டுள்ளது.