இந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பாளரின் மாருதி சுஸுகி டிசையர் காம்பாக்ட் ரக செடான் காரில் புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் பிஎஸ்-6 நடைமுறையின் காரணமாக விலையை ரூ.12,690 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய AIS-145 பாதுகாப்பு விதிகளுக்கு (AIS 145 Safety Norms) உட்பட்டு அடிப்படையான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய இபிடி, முன்பக்க இருக்கைகளுக்கு சீட் பெல்ட் ரிமைன்டர் , ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் இணைக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து மாடல்களிலும் அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட உள்ளது.
மாருதி சுஸுகி டிசையர்
முன்பாக இந்தியாவில் மாருதியின் பலேனோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் 2019 மாருதி ஆல்ட்டோ போன்ற கார்களில் அடிப்படையான பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வு தரத்துக்கு இணையான பெட்ரோல் என்ஜின் பெற்றிருந்த நிலையில் தற்போது டிசையர் காம்பாக்ட் செடான் காரின் பெட்ரோல் மாடலிலும் பிஎஸ் 6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் K12B பெட்ரோல் என்ஜின் 83 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.
பாதுகாப்பு அம்சங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பிஎஸ் 6 டீசல் காரில் வழங்கப்படாது. மாருதி பயன்படுத்தி வரும் ஃபியட் நிறுவன 1.3 லிட்டர் டீசல் எனஜின் உற்பத்தி ஏப்ரல் 2020க்கு முன்பாக நிறுத்தப்பட உள்ளது.
சமீபத்தில், மஹிந்திரா நிறுவனமும், தனது கார்களில் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளதால், அதிகபட்சமாக ரூ.36,000 வரை விலையை உயர்த்தியுள்ளது.