மாருதி சுசூகி நிறுவனம் நான்காம் தலைமுறை புதிய டிசையர் காரின் குளோபல் கிராஷ் டெஸ்ட் மையத்தின் மூலம் சோதனை செய்யப்பட்டதில் வயது வந்தோர் பாதுகாப்பில் ஐந்து ஸ்டார் ரேட்டிங் அதே நேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் நான்கு ஸ்டார் ரேட்டிங் பெற்று மிக உறுதியான கட்டுமானத்தை தற்பொழுது மாருதி சுசுகி நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது.
முந்தைய மூன்றாவது தலைமுறை மாடல் ஆனது கிராஸ் டெஸ்ட் சோதனையில் வெறும் 2 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்று இருந்த நிலையில் தற்போது 5 ஸ்டார் ரைட்டிங்கை பெற்றுள்ளது மிகப்பெரிய ஒரு முன்னேற்றமாக கருதப்படுகின்றது குறிப்பாக இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் பெரும்பாலான காரர்கள் உறுதியான கட்டுமானத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
கண்டிப்பாக டாடா மற்றும் மகேந்திரா போன்ற நிறுவனங்களுடன் ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா டொயோட்டா போன்ற நிறுவனங்கள் எல்லாம் தரமான கார்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் சுசூகி நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதால் நாட்டின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான தயாரிப்பாளருக்கு இது மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது.
வருகின்ற நவம்பர் பதினொன்றாம் தேதி விற்பனைக்கு வர உள்ள புதிய டிசையர் மாடல் கட்டுமானத்தை பொறுத்தவரை உறுதியான கட்டுமானத்தை வெளிப்படுத்தும் வகையில் வயது வந்தோர் பாதுகாப்பில் பெறவேண்டிய 34 புள்ளிகளுக்கு 31.24 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளது. அடுத்து குழந்தைகளுக்கு பெறவேண்டிய 49 புள்ளிகளுக்கு 39.20 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது இதன் காரணமாக நான்கு ஸ்டார் ரேட்டிங் குழந்தைகளுக்கு பெற்றுள்ளது.
மோதல் சோதனையை பொருத்தவரை முன்புற மோதலில் நெஞ்சு மற்றும் வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பினை வழங்குகின்றது அதேபோல பக்கவாட்டு மோதலிலும் நெஞ்சு மற்றும் வயிறு பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குவதுடன் கால்கள் மற்றும் முழங்காலுக்கும் ஓரளவு சிறப்பான பாதுகாப்பினை புதிய டிசையர் காரானது வழங்குகின்றது.
சைடு போல் மோதலில் மட்டும் நெஞ்சு பகுதிக்கு சற்று லேசான பாதுகாப்பினை வழங்குகின்றது மற்றபடி பாடி கட்டுமானம் மற்றும் செல் போன்றவை எல்லாம் சிறப்பாக அமைந்திருக்கின்றது மேலும் அதிகப்படியான லோடினை தாங்கு மொபைலும் அமைந்திருப்பதாக சர்வதேச கிராஸ் டெஸ்ட் மையம் சோதனையில் தெரியவந்துள்ளது.