இந்தியாவில் பிரசித்தி பெற்ற செடான் ரக மாடலான மாருதி டிசையர் காரின் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட சற்று மேம்பட்ட வசதிகளுடன் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தினை பெற்றிருக்கும்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் ஆரா, ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் டாடா டிகோர் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள டிசையர் காரில் முன்பாக இடம்பெற்றிருக்கின்ற என்ஜினுக்கு மாற்றாக இப்பொழுது மிகவும் பவர்ஃபுல்லான 1.2 லிட்டர் K12C டூயல் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
அதிகபட்சமாக 90 எச்பி பவரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் உட்பட ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியும் இடம்பெற உள்ளது. முன்பாக இந்த என்ஜின் பலேனோ காரில் இடம்பெற்றிருக்கின்றது. எனவே, முன்பு இடம்பெற்று வந்த சுசுகியின் ஸ்மார்ட் ஹைபிரீட் சிஸ்டம் தற்பொழுது இடம்பெறாது என தெரிகின்றது.
தோற்ற அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கிரில் ஆனது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பனி விளக்கு அறை, ஏர் டேம் போன்றவை மாற்றப்பட்டிருப்பதுடன் டாப் வேரியண்டில் க்ரோம் ஃபினிஷ் பாகங்களை பெற்றிருக்கலாம். மற்றபடி பக்கவாட்டுத் தோற்றத்தில் எதுவும் பெரிதாக மாற்றமில்லை ஆனால் புதிய அலாய் வீல் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் இன்டிரியர் பொறுத்தவரை ,மேம்பாடுகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக. மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகள் கிடைக்கும்.
spy image source – gaadiwaadi.com