இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், டாக்சி சந்தைக்கு ஏற்ற மாடலாக செலிரியோ காரின் மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 காரை ரூ.4.21 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி செலிரியோ டூர் H2
இந்தியா சந்தையில் கேப் ஆப்ரேட்டர்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில், சிறப்பான அம்சங்களை கொண்டதாக வந்துள்ள செலிரியோ டூர் ஹெச்2 மாடலில் விற்பனையில் உள்ள செலிரியோ காரில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 68hp ஆற்றல் மற்றும் 90Nm டார்க் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 காரின் மைலேஜ் லிட்டருக்கு 23.10 கிமீ என ஆராய் சான்றியளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டாக்சி வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கருவியை பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, முதல் மோட்டார் வாகன தயாரிப்பாளராக மாருதியின் செலிரியோ டூர் ஹெச்2 காரில் மணிக்கு 80 கிமீ வேகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மாருதி செலிரியோ காரின் LXi(O) வேரியன்டை விட ரூ.13,000 குறைந்த விலையில் வந்துள்ள டூர் வேரியன்ட் ஓட்டுநர் பக்க காற்றுப்பை வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 கார் விலை ரூ.4.21 லட்சம் (எக்ஸ்- ஷோரூம் டெல்லி)