இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது மாடல்களுக்கு ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.53 லட்சம் வரை சலுகைகள் மார்ச் 2024க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக துவக்க நிலையில் சந்தையில் உள்ள மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு ரூ.67,000 வரை தள்ளுபடியில் ரொக்க தள்ளுபடி ரூ.45,000 வரை கிடைக்கின்றது.
Maruti Suzuki offers March 2024
அடுத்து, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ காருக்கு முறையே ரூ.66,000 மற்றும் ரூ.61,000 வரை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு இதில் ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போன்ஸூம் உள்ளது.
டால்பாய் ஹேட்ச்பேக் வேகன்ஆர் காருக்கு ரூ.61,000 தள்ளுபடி, ஈக்கோ வேனுக்கு ரூ.34,000 மற்றும் இக்னிஸ் காருக்கு ரூ.67,000 மற்றும் பிரபலமான ஸ்விஃப்ட் காருக்கு ரூ.47,000 மற்றும் டிசையர் செடானுக்கு ரூ.37,000 வரை கிடைக்கின்றது.
ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலான ஜிம்னி MY2023 மாடலுக்கு ரூ.1.53 லட்சம் தள்ளுபடியில் ரூ.1.50 லட்சம் ரொக்க தள்ளுபடி மட்டும் கிடைக்கின்றது. 2024 மாடலுக்கு ரூ.53,000 வழங்கப்படுகின்றது.
அடுத்து, மாருதி ஃபிரான்க்ஸ் காருக்கு ரூ.37,000 மற்றும் பலேனோ, சியாஸ் காருக்கு ரூ.65,000 தள்ளுபடி, கிராண்ட் விட்டாரா மாடலுக்கு ரூ.1,07,000 வரை தள்ளுபடி 2023 மாடலுக்கும் 2024 வருடத்திற்கான விட்டாராவுக்கு ரூ.92,000 வரை சலுகை கிடைக்கின்றது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் டீலர்களை பொறுத்து ஸ்டாக் கையிருப்பை பொறுத்து மாறுபடும். மேலும் விபரங்களுக்கு டீலர்களை அனுகலாம்.