மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள 2025 பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலில் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஆன்-ரோடு விலை ரூ. 10.19 லட்சம் முதல் ரூ.17.80 லட்சம் வரை அமைந்துள்ளது.
Maruti Suzuki Brezza on-road price
பிரெஸ்ஸா மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.54 லட்சம் துவங்குகின்ற நிலையில், இதன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது.
Variant | Ex-showroom Price | on-road Price |
LXi MT | Rs 8,54,001 | Rs 10,18,486 |
LXi CNG MT | Rs 9,49,000 | Rs 11,24,980 |
VXi MT | Rs 9,64,499 | Rs 11,71,909 |
VXi CNG MT | Rs 10,64,501 | Rs 13,44,318 |
Smart Hybrid VXi AT | Rs 11,09,500 | Rs 13,95,045 |
Smart Hybrid ZXi MT | Rs 11,14,500 | Rs 14,02,890 |
ZXi CNG MT | Rs 12,09,500 | Rs 15,21,897 |
Smart Hybrid ZXi AT | Rs 12,54,500 | Rs 15,72,654 |
Smart Hybrid ZXi+ MT | Rs 12,58,000 | Rs 15,77,986 |
Smart Hybrid ZXi+ AT | Rs 13,98,000 | Rs 17,45,786 |
Smart Hybrid ZXi MT DT | Rs 11,30,500 | Rs 14,19,210 |
ZXi CNG MT DT | Rs 12,25,500 | Rs 15,38,641 |
Smart Hybrid ZXi AT DT | Rs 12,70,500 | Rs 15,88,365 |
Smart Hybrid ZXi+ MT DT | Rs 12,74,000 | Rs 15,92,765 |
Smart Hybrid ZXi+ AT DT | Rs 14,14,000 | Rs 17,62,854 |
இதில் DT என்பது டூயல் டோன் கொண்ட நிறங்களாகும், கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.
K15C 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் சிஎன்ஜி பயன் முறையில் 88 hp மற்றும் 122 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
பெட்ரோல் என்ஜின் 103 hp மற்றும் 136 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு உள்ளது.
பிரெஸ்ஸா சிஎன்ஜி 25.51 கிமீ ஒரு கிலோ எரிபொருளுக்கு வழங்கும் நிலையில், பெட்ரோல் மேனுவல் லிட்டருக்கு 17.80 கிமீ, ஸ்மார்ட் ஹைபிரிட் உள்ள மேனுவல் லிட்டருக்கு 19.89 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 19.80 கிமீ வழங்குகின்றது.
இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில், டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ஸ்கோடா கைலாக், கியா சிரோஸ் மற்றும் மஹிந்திரா XUV 3XO, நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளுகின்றது.