மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் முன்பாக நீக்கப்பட்ட SHVS மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது மாருதி பிரெஸ்ஸா விலை ரூ.8.29 லட்சம் முதல் ரூ.13.98 லட்சம் வரை கிடைக்கின்றது.
பிரெஸ்ஸா எஸ்யூவி காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் மட்டும் SHVS எனப்படுகின்ற மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Brezza
சுசூகி பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டுள்ள K15C 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆனது சிஎன்ஜி பயன் முறையில் 88 hp மற்றும் 122 Nm டார்க் வெளிப்படுத்தும். பெட்ரோல் என்ஜின் 102 bhp மற்றும் 136 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு உள்ளது.
இந்த மாடலில் HVS எனப்படுகின்ற மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் ஆனது டாப் வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கின்றது. சாதாரன மேனுவல் வேரியண்ட் ஆனது 17.38 கிமீ ஆகவும், மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் லிட்டருக்கு 19.89 கிமீ ஆக வெளிப்படுத்துகின்றது.
New Maruti Brezza Mileage list
Fuel Type | Transmission | ARAI Mileage |
---|---|---|
Petrol (LXI and VXI) | Manual | 17.38 km/l |
Petrol SHVS (ZXI, ZXI+) | Manual | 19.89 km/l |
Petrol | Automatic | 19.80 km/l |
CNG | Manual | 25.51 km/kg |
டாப் வேரியண்ட் பிரெஸ்ஸா ZXi வகையில் ஸ்மார்ட்பிளே Pro+ அமைப்புடன் கூடிய 7.0-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன், சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களை பெறுகிறது.
Brezza Variants | Ex-showroom |
---|---|
K15C Petrol LXI 5MT | ₹ 8,29,000 |
K15C Petrol VXI 5MT | ₹ 9,64,500 |
K15C Petrol ISG ZXI 5MT | ₹ 11,04,500 |
K15C Petrol ISG ZXI+ 5MT | ₹ 12,48,000 |
K15C Petrol ISG VXI 6 AT | ₹ 11,14,500 |
K15C Petrol ISG ZXI 6AT | ₹ 12,54,500 |
K15C Petrol ISG ZXI+ 6AT | ₹ 13,98,000 |
K15C S-CNG LXI 5MT | ₹ 9,24,000 |
K15C S-CNG VXi 5MT | ₹ 10,59,500 |
K15C S-CNG ZXI 5MT | ₹ 11,99,500 |
(Ex-showroom Chennai)
டூயல் டோன் பெற்ற வேரியண்டுகளின் விலை ரூ.16,000 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது.
டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வெனியூ மற்றும் மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.