ரூ.4.84 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி எரிபொருள் வசதி பெற்ற மாடல் மொத்தமாக LXI, LXI(O), VXI மற்றும் VXI(O) என நான்கு விதமான வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.
பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் சாதாரணமாக 67 HP பவரை 5500 RPM-லும் மற்றும் 90 Nm டார்க்கை 3500 RPM-ல் வழங்குகின்றது. அதே நேரத்தில் சிஎன்ஜி மூலமாக 58 HP பவரை 5500 RPM-லும் மற்றும் 78 Nm டார்க்கை 3500 RPM-ல் வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வழங்கப்படுகின்றது. இதில் சிஎன்ஜி ஏஎம்டி ஆப்ஷன் இடம்பெறவில்லை.
55 லிட்டர் கொள்ளளவு சிஎன்ஜி டேங்க் கொண்டுள்ள இந்த மாடல் மிக சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் இரட்டை முறையில் இயங்கும் ECU பெற்றதாக அமைந்துள்ளது.
கடந்த 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ காரின் விலை பெட்ரோல் மாடலை விட ரூ.75,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி விலை பட்டியல்
LXI CNG – ரூ. 4.84 லட்சம்
LXI (O) CNG – ரூ. 4.90 லட்சம்
VXI CNG – ரூ. 5.07 லட்சம்
VXI (O) CNG – ரூ. 5.13 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)