மாருதி சுசூகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற எஸ்-கிராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.8.39 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12.39 லட்சம் வரை விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு கொண்டு வரப்பட்ட எஸ்-கிராஸ் காரில் இப்போது பிஎஸ்-6 இன்ஜின் ஆதரவுடன் வந்துள்ளது. முன்பாக இடம் பெற்றிருந்த டீசல் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது. 105 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டடுள்ளது.
எஸ்-கிராஸ் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 18.55 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் லிட்டருக்கு 18.43 கிமீ ஆகும்.
முந்தைய முன்புற கிரில் அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. எல்இடி ஹெட்லைட், 16 அங்குல அலாய் வீல், ஆட்டோ ஃபோல்டிங் ORVM, மற்றும் சில்வர் நிற மேற்கூறை ரெயில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்டிரியரில் 7 அங்குல ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ 2.0, ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவு, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி இணைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி எஸ்-கிராஸ் விலை
Sigma MT – ரூ. 8.39 லட்சம்
Delta MT – ரூ. 9.60 லட்சம்
Delta AT – ரூ. 10.83 லட்சம்
Zeta MT – ரூ. 9.95 லட்சம்
Zeta AT – ரூ. 11.18 லட்சம்
Alpha MT – ரூ. 11.15 லட்சம்
Alpha AT – ரூ. 12.39 லட்சம்