இந்தியாவின் முன்னணி மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகபட்சமாக ரூ,1,00,000 வரை சலுகைகளை வழங்குகின்றது. ஆனால் இந்த சலுகை ஆரம்ப நிலை ஜெட்டா வேரியண்டுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்னி எஸ்யூவி காரில் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
சுசூகி AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
Maruti Jimny Festive offers
ஜிம்னி ஜெட்டா வேரியண்டுக்கு ரூ.50,000 தள்ளுபடி மற்றும் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் அல்லது லாயல்டி போனஸ் சலுகையில் உள்ளது. இந்தச் சலுகை நடப்பு மாத இறுதி வரை கிடைக்கும் Zeta மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.
மேலும் படிக்க – மாருதி ஜிம்னி ஆன்-ரோடு விலை பட்டியல்