இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் மாருதி சுசுகியின் 2017 மாருதி டிசையர் கார் ரூ. 5.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் எனப்படும் ஏஎம்டி என இரு கியர்பாக்ஸ் வகையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாருதி டிசையர் கார்
புதிய தலைமுறை டிசையர் கார் ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ள புதிய ஸ்விஃப்ட் மாடலை அடிப்படையாக கொண்டஐந்தாவது தலைமுறை ஹார்ட்டெக் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும்.
டிசைன்
மிக நேர்த்தியான கட்டமைப்பை வெளிப்படுத்துகின்ற புதிய டிசையர் மாடல் முந்தைய மாடலை விட சிறப்பான வடிவ அம்சங்களை பெற்றிருப்பதுடன், மிக சிறப்பான பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டதாக விளங்குகின்றது.
டிசையர் முகப்பில் மிக நேர்த்தியான க்ரோம் பட்டைகளை பெற்ற கிரிலுடன் கூர்மையான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் புராஜெக்ட்ர முகப்பு விளக்குடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது.
பக்கவாட்டில் சிறப்பான தோற்ற பொலிவை வழங்கவல்ல டைமன்ட் கட் அலாய் வீல் உள்பட பின்பறத்தில் புதுப்பிக்கப்பட்ட பூட் டிசைனை பெற்றதாக விளங்குகின்றது.
இன்டிரியர்
முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அடிப்படையான வசதிகளாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்.லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் எஞ்சின் பட்டன் ஸ்டார்ட் வசதி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவற்றுடன் 40 மிமீ கூடுதல் அகலம் மற்றும் பின் இருக்கையில் கால்களுக்கான இடவசதி 55 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அளவுகள்
நீளம் | 3,995 mm |
அகலம் | 1,735 mm |
உயரம் | 1,515 mm |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 163 mm |
பூட் | 369-litres |
டிசையர் கார் எஞ்சின் விபரம்
1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
டிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக டிசையர் மாறியுள்ளது.
டிசையர் பாதுகாப்பு அம்சங்கள்
டிசையர் காரில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், இரட்டை ஏர்பேக், இபிடி மற்றும் ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
வேரியன்ட்
டிசையர் விலை பட்டியல்
டிசையர் மேனுவல் விலை பட்டியல்
வேரியன்ட் விபரம் | பெட்ரோல் | டீசல் |
LXi | ரூ.5.45 லட்சம் | ரூ.6.45 லட்சம் |
VXi | ரூ.6.29 லட்சம் | ரூ.7.29 லட்சம் |
ZXi | ரூ.7.05 லட்சம் | ரூ.8.05 லட்சம் |
ZXi+ | ரூ.7.94 லட்சம் | ரூ.8.94 லட்சம் |
டிசையர் ஆட்டோமேட்டிக் விலை பட்டியல்
வேரியன்ட் விபரம் | பெட்ரோல் | டீசல் |
VXi | ரூ.6.76 லட்சம் | ரூ. 7.76 லட்சம் |
ZXi | ரூ.7.52 லட்சம் | ரூ.8.52 லட்சம் |
ZXi+ | ரூ.8.41 லட்சம் | ரூ.9.41 லட்சம் |
மாருதி டிசையர் கார் குறிப்புகள்
- டிசையர் பெட்ரோல் காரின் ஆரம்ப விலை ரூ.5.45 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரை
- டிசையர் டீசல் காரின் ஆரம்ப விலை ரூ.6.45 லட்சம் முதல் ரூ.9.41 லட்சம் வரை
For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan