மஹிந்திராவின் பிரபலமான எக்ஸ்யூவி 700 மாடல் ஆனது ரூபாய் 30,000 முதல் 50,000 வரை வேரியண்ட் வாரியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பாக ஆரம்ப நிலை வேரியண்டுகளில் பெரிதாக விலை உயர்வு இல்லை என்றாலும் டாப் வேரியண்டில் விலை உயர்வு உள்ளது.
விலை உயர்வைத் தவிர மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. எஞ்சின் ஆப்ஷனிலும் எந்த மாற்றமும் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பாக 2.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்யூவி700 காரில் 197hp பவர் மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுதும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மேனுவல் மாடல் 153 hp பவர், 420 Nm டார்க் உடன் அடுத்து 6 வேக ஆட்டோமேட்டிக் 182 hp பவர், 450 Nm டார்க் ஆனது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இருவிதமான பவர் ஆப்ஷனை கொண்டுள்ளது.
Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பு, டிஜிட்டல் கிளஸ்ட்டர், 10.24 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கின்றது.
தற்பொழுது 2024 மஹிந்திரா XUV700 எஸ்யூவி மாடலின் 13.99 லட்சம் முதல் ரூ. 25.49 லட்சம் வரை அமைந்துள்ளது.