தனது புதிய எக்ஸ்யூவி 700 (ஸ்சாங்கோங் ரெக்ஸ்டன் அடிப்படையிலான Y400 எஸ்யூவி) வகை கார்களை வரும் அக்டோபர் 9ம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்யூவி 700களை காட்சிக்கு வைத்த மகேந்திரா நிறுவனம், எக்ஸ்யூவி 700 கார்களின் விலையாக 24 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோ ரூம் விலை) அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாடல்களுக்கும், சர்வதேச மாடல்களுக்கும் இடையேயான வேறுபாடு கிரில்களில் ஸ்சாங்கோங் எம்பளத்திற்கு பதிலாக மகேந்திரா நிறுவன பேட்ஜ் இடம் பெற்றிருக்கும். கூடுதலாக, இந்திய சாலைகளுக்கு ஏற்ப சஸ்பென்சன் செட்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், HID ஹெட்லேம்ப்கள், LED டே லைட் ரன்னிங் லைட்கள், எலெக்ட்ரிக் சன் ரூஃப், 9.2 இன்ச் டச் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் பிளே, வென்டிலேட்டருடன் கூடிய சீட்கள், பார்கிங் பிரேக், 9 ஏர்-பேக், EBD களுடன் கூடிய ABS, டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றை பெற்றுள்ளது.
இந்த கார், 4850mm நீளமும், 1960mm அகலம் மற்றும் 1825mm உயரமும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி 2865mm வீல் பேஸ்களையும் கொண்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் 2.2 லிட்டர் e-XDi220 LET டீசல் இன்ஜின்களுடன், 184bhp மற்றும் 400Nm டார்க்யூ-வை கொண்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு மெனுவல் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ச்மிஷ்னை கொண்டுள்ளது.
இதுமட்டுமின்றி மகேந்திரா நிறுவனம் சார்பில், Tivoli சார்ந்த S201 மினி எஸ்யூவிகள் வரும் 2019ம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்ய உள்ளது.