வரும் பிப்ரவரி 14ந் தேதி புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா அறிவித்துள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலைக்குள் எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வெளியாக உள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300
ரூ.20,000 செலுத்தி டீலர்கள் அலத்து ஆன்லைன் வாயிலாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இந்த மாடலில் இடம் பெற உள்ள வண்ணங்கள் விபரம் வெளியாகியுள்ளது.
சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு, வெள்ளை , சில்வர் மற்றும் அக்வாமரைன் என மொத்தமாக 6 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது.
எக்ஸ்யூவி300 பாரத் கிராஷ் டெஸ்ட் (Bharat New Vehicle Safety Assessment Program -BNVSAP) தரத்துக்கு ஏற்றதாகவும், 5 இருக்கை, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டாப் W8 வேரியன்டில் அதிகபட்சமாக 7 காற்றுப்பைகள், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பெற்றதாக விளங்கும். இந்த எஸ்யூவி W2, W4, W6 மற்றும் W8 என மொத்தம் நான்கு விதமான வேரியன்டில் விற்பனைக்கு கிடைக்கும்.
என்ஜின் தொடர்பான விபரங்கள் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், 200NM டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் அதிகபட்சமாக 300NM டார்க் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இரு என்ஜினிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். எதிர் காலத்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது.
4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற எஸ்யூவி மாடல்களான ஃபோர்ட் ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹோண்டா WR-V, ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களுக்கு சவாலாக அமைந்திருக்கும்.