7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
இந்தியா உட்பட சர்வதேச அளவில் எஸ்யூவி ரக மாடல் மீதான ஈர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய யுட்டலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் வெளியிட உள்ள புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவி 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தில் சவாலான விலையில் ஸ்டைலிஷான அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 என்ஜின்
பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ள எக்ஸ்யூவி300 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்கள் உள்ளது.
110 hp பவர் மற்றும் 200 NM டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மஹிந்திரா XUV300 பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ ஆகும்.
டீசல் தேர்வில் 117 hp பவர் வெளிப்படுத்தும் என்ஜின் அதிகபட்சமாக 300 NM டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா XUV300 டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்.
எக்ஸ்யூவி 300 வேரியண்ட் விபரம்
எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடலில் மொத்தம் நான்கு வேரியன்ட்டுகள் கிடைக்க உள்ளது. அவை W2, W4, W6 மற்றும் W8 என விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பொதுவாக கிடைக்க உள்ளது.
எக்ஸ்யூவி300 W4 வேரியன்ட் – விலை ரூ.7.90 – ரூ. 8.49 லட்சம்
அடிப்படை வேரியண்ட் மாடலாக கிடைக்கின்ற எக்ஸ்யூவி300 W4 வேரியன்டில் குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சம் இடம்பெற்றுள்ளது.
- 4 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம் (டீசல்)
- எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் விங் கண்ணாடி
- எலக்ட்ரிக் டெயில்கேட்
- கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்
- மல்டி மோட் ஸ்டியரிங்
- 16 அங்குல ஸ்டீல் வீல்
- பாதுகாப்பு சார்ந்த இரட்டை காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ், இபிடி உள்ளன
எக்ஸ்யூவி300 W6 வேரியன்ட் ரூ.8.75 லட்சம் – ரூ. 9.30 லட்சம்
W4 வேரியண்டில் உள்ள வசதிகளுடன் நடுத்தர வேரியண்ட் மாடலாக உள்ள W6 வேரியண்டில் கீலெஸ் என்ட்ரி, ஸ்பாய்லர் போன்றவை முக்கிய அம்சங்களாகும்.
- கீலெஸ் என்ட்ரி
- ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்
- வீல் கேப்
- ரூஃப் ரெயில்
- ரியர் ஸ்பாய்லர் மற்றும் நிறுத்த விளக்கு
எக்ஸ்யூவி300 W8 வேரியன்ட் – ரூ. 10.25 லட்சம் – ரூ.10.80 லட்சம்
W6 வேரியண்டில் உள்ள வசதிகளுடன் டாப் வேரியண்ட் மாடலாக உள்ள W8 வேரியண்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்றவை முக்கிய அம்சங்களாகும்.
- கீலெஸ் என்ட்ரி மற்றும் கோ
- 7 அங்குல ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
- ESP மற்றும் ஹீல் ஹோல்டு அசிஸ்ட்
- மைக்ரோ ஹைபிரிட் நுட்பம்
- இரட்டை ஆட்டோமேட்டிக் ஏசி
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ரிவர்ஸ் கேமரா
- 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்ய உதவும் ஓட்டுநர் இருக்கை
- தானியங்கி ஹெட்லைட் மற்றும் வைப்பர்
- எலக்ட்ரிக் முறையில் மடங்கும் பின்புறம் பார்க்கும் கண்ணாடி
- ஆம்பியன்ட் லைட்டிங்
- ரன்னிங் எல்இடி விளக்குகள்
- 17 அங்குல அலாய் வீல்
- முன் மற்றும் பின்புறங்களில் ஸ்கிட் பிளேட்
எக்ஸ்யூவி300 W8 (O) வேரியன்ட் – ரூ. 11.44 லட்சம் – ரூ.11.99 லட்சம்
W8 வேரியண்டில் உள்ள வசதிகளுடன் டாப் வேரியண்ட் மாடலாக உள்ள W8 (O) வேரியண்டில் 7 ஏர்பேக்குகள், சன்ரூஃப் போன்றவை முக்கிய அம்சங்களாகும்.
- கணுக்கால் மற்றும் சைடு ஏர்பேக்குகள்
- லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி
- தானாகவே டிம் ஆகின்ற ரியர் வியூ கண்ணாடி
- டயரின் அழுத்தம் அறியலாம்
- முன்புற பார்க்கிங் சென்சார்
- 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்
- சன் ரூஃப்
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி போட்டியாளர்கள்
விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி வந்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை பட்டியல்
XUV300 W4 (petrol) – ரூ. 7.90 லட்சம்
XUV300 W6 (petrol) – ரூ. 8.75 லட்சம்
XUV300 W8 (petrol) – ரூ. 10.25 லட்சம்
XUV300 W8 (O) (petrol) – ரூ. 11.44 லட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டீசல் கார் விலை பட்டியல்
XUV300 W4 (Diesel) – ரூ. 8.49 லட்சம்
XUV300 W6 (Diesel) – ரூ. 9.30 லட்சம்
XUV300 W8 (Diesel) – ரூ. 10.80 லட்சம்
XUV300 W8 (O) (Diesel) – ரூ. 11.99 லட்சம்