Categories: Car News

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை திரும்ப அழைக்கின்றது

c226c mahindra xuv300 front

பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி மாடலான மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் ஏற்பட்டுள்ள சஸ்பென்ஷன் சார்ந்த கோளாறுக்கு தீர்வினை வழங்கும் நோக்கில் இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி பிரிவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் டாடா நெக்ஸானுடன் போட்டியிடுகிறது. இந்த எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுடன் வழங்கப்பட்டது, இவை இரண்டும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், டீசல் மாடலுக்கான 6 ஸ்பீடு ஏஎம்டி விருப்பத்தை மஹிந்திரா வழங்கியுள்ளது.

ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில், மே 2019 வரை தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி 300 காரில் ஏற்பட்டுள்ள சஸ்பென்ஷன் பிரச்சனைக்கு இலவசமாக மாற்றி தர உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களை மஹிந்திரா தொடர்பு கொள்ள உள்ளது.